மேற்கு ஆப்பிரிக்காவில் ஆட்கொல்லி நோயாக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றிலிருந்து தப்புவதற்காக லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளுடனான எல்லைகளை ஐவரி கோஸ்ட் மூடியுள்ளது.
இரண்டு அண்டைநாடுகளிலும் எபோலாத் தொற்று தொடர்ந்தும் பரவிவருவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஐவரி கோஸ்ட் அரசாங்கம் கூறியுள்ளது.
இப்படியான பயணக் கட்டுப்பாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை தீவிரப்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
எனினும், பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ள புதிய நாடாக ஐவரி கோஸ்ட் இந்த நடவடிக்கையை தற்போது அறிவித்துள்ளது.
லைபீரியா, கினி மற்றும் சியேரா லியோன் ஆகிய நாடுகளிலிருந்து 1300க்கும் மேற்பட்ட மக்கள் எபோலா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.