நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் மற்றும் தீர்த்த உற்சவத்தன்று காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை தீர்க்கவிருக்கும் பக்தர்கள் காலை 10.30 மணிக்கு பின்னரே ஆலய வளாகத்திற்குள் வர அனுமதிக்க முடியும் என் ஆலயத்தினர் அறிவித்துள்ளனர் .
நல்லூர் கந்தனின் தேர் மற்றும் தீர்த்த உற்சவத்தன்று பல இடங்களிலும் இருந்தும் தங்களுடைய நேர்த்திக் கடனை செய்வதற்கு பக்தர்கள் வருவார்கள் . அவர்களில் தூக்குக் காவடி எடுத்து நேர்த்தி செய்பவர்கள் ஆலய வளாகத்திற்குள் காலை 10.30 மணிக்கு பின்னரே வர முடியும்.
எனினும் ஆலயத்திற்குள் வர 4 பாதைகள் இருந்தாலும் தூக்குக் காவடியுடன் வருபவர்கள் சங்கிலியன் வீதி , அரசடி வீதி ஆகியனவற்றின் ஊடாக தங்களுடைய வாகனங்களில் வரமுடியும்.
இதேவேளை, சாதாரணமான காவடியுடன் வருபவர்களுக்கு கட்டுப்பாடு எதனையும் விதிக்கவிலை. கற்பூரச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் முடிப்பவர்கள் வைரவர் ஆலயத்திற்கு முன்னால் மட்டுமே நின்று தங்களுடைய நேர்த்திக்கடன்களை செய்ய வேண்டும்.
அத்துடன் இனி வரும் காலங்கள் விசேட பூஜைகள், திருவிழாவாக இருப்பதால் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் எனவே ஆலயத்திற்கு வருபவர்கள் தங்க நகைகளை அணிந்து வரவேண்டாம் என்றும் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் மேலும் தேர் உற்சவம், தீர்த்த உற்சவம் என்பன வழமைபோல உரிய நேரத்திற்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.