ஜப்பானிய காணி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை உதவி அமைச்சர் மனபு சகைய் (Mr.Manabu Sakai) நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹொபொ (Mr. Nobuhito Hobo) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மக்கள் தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்லை ,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன மற்றும் ஜப்பானிய பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
கொழும்பு நகரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய போக்குவரத்து திட்டம் குறித்த அறிக்கையை ஜப்பானிய காணி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை உதவி அமைச்சர் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் கையளித்தார்.