தனது இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெறும் இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தனவின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் பார்வையி்ட்டார்.
பாகிஸ்தான் அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்டில் களமிறங்கி விளையாடிய மஹேல ஜயவர்த்தனவுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததோடு வீரர்களும் சினேகபூர்வமாக உரையாடினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிக்கொண்டதன் மூலம் இலங்கை அணி சர்வதேச டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி இலங்கை அணி தற்போது 4ஆம் இடத்தை பெற்றுள்ளது.
ஆறாம் இடத்தில் இருந்த இலங்கை அணி இரண்டு இடங்கள் முன்னேறி இவ்வாறு நான்காம் இடத்தை பெற்றுள்ளது.
நேற்று வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலின் படி தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் அவுஸ்ரேலியாவும், மூன்றாம் இடத்தில் இங்கிலாந்தும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்த பட்டியலின் மூன்றாம் இடத்தில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் காணப்படுகிறார்.