இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம் காரணமாக பிச்சை எடுத்து பிழைப்பவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகின்றது.
அவ்வாறு பிச்சை எடுப்போர் பெரும்பாலும் இலங்கையர்களாவே இருப்பார்கள். ஆயினும் கொழும்பு நகரில் வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பிச்சை எடுத்து வாழ்வதைக் காண முடிந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த வெளிநாட்டு குடும்பம் வாழ்ந்துவருகிறது. இந்த குடும்பத்தில் ஆண், பெண், மூன்று சிறுவயது பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இலங்கைக்குள் இந்த விதமாக வெளிநாட்டு குடும்பம் பிச்சைக்காரர்களாக மாறியுள்ளமை ஆச்சரியம் தரும் விடயமே.