மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு மதுசாரநிலையம் ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் சம்பவத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது 7 பொலிஸாரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.