இனி ஐந்து ரூபாய்க்குத் தபால் அனுப்ப முடியாது!

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அரசால் தபால் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டன.

எனினும் குறித்த கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களுக்கு அறியப்படுத்தும் நோக்கில் ஒரு வாரகாலம் அதனை பிற்போட்டதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டார்.

இதன்படி சாதாரண கடிதங்களுக்கான கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தபால் அட்டைகளுக்கான விலை எட்டு ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts