சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைத்து, அவர்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதத்தில் குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படும் நால்வரை கொழும்பு, பன்னல மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குவைத்தில் வசிக்கும் இலங்கை பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பிய தகவலை, அவர் மேலும் மூவருக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலுதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.