தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 400 பேருக்கும் அதிகமானவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வு காரணமாக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
30 ஆயிரம் குடியிருப்புகள் பகுதியளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.