இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பான வீடியோ ஆவணத்தை தயாரித்து வெளியிட்ட கெலும் மெக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட யுத்த சூனிய வலயம் உட்பட யுத்தம் தொடர்பான வீடியோக்களை மக்ரே தயாரித்துள்ளார்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், இலங்கை மீதான விசாரணை இரகசியமானதாக இருப்பினும் பொருத்தமான வேளையில் விசாரணைக்கு உதவ தான் தயாராக இருப்பதாக மக்ரே கூறியுள்ளார்.
இராணுவ மனித உரிமை துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக காட்டும் மக்ரேயின் வீடியோக்களை அரசாங்கம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. புலம்பெயர் தமிழர்களும் இந்த விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
அதேசமயம், காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவும் யுத்தக் குற்றங்களை ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது.