வடமாகாணத்தில் புதிய பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகள் என கல்வி அபிவிருத்திக்காக கொரிய அரசாங்கத்தினால் 500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இப்பணத்தொகையின் மூலம் வடமாகாண பாடசாலைகளுக்கென 105 வகுப்பறைகள் 13 செயற்பாட்டு அறைகள் மற்றும் 12 விடுதிகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மிக நன்மையடைந்த பாடசாலைகளாக கிளிநொச்சி மகா வித்தியாலயம், முருகானந்தா வித்தியாலயம், மற்றும் வறணி மத்திய மகா வித்தியாலயம் ஆகியன குறிப்பிடக் கூடியவையாகும்.