Ad Widget

வடக்­கி­லுள்ள இரா­ணு­வத்­தி­னரால் மக்­க­ளுக்குப் பல்­வேறு பாதிப்­புக்கள் : யாழ்.ஆயர்

வடக்கில் நீண்­ட­கா­ல­மாக நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­களின் வாழ்வில் பல்­வேறு முட்­டுக்­கட்­டை­களும் சிக்­கல்­களும் நாளாந்தம் ஏற்­பட்டு வரு­கின்­றன.

இடம்­பெ­யர்ந்த மக்கள் பலர் தமது சொந்த ஊர்­க­ளுக்குத் திரும்ப முடி­யா­த­வர்­க­ளா­கவும் தமது ஆல­யங்­களை பல்­வேறு தடை­களைத் தாண்டி வரு­டத்தில் ஒரு தடவை மாத்­தி­ரமே பார்க்­கக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் உள்­ளனர்.

இதனால் மக்கள் உள ரீதி­யா­கவும் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு இரா­ணு­வத்­தினர் கார­ண­மாக இருந்து வரு­கின்­றனர் என யாழ்.கத்­தோ­லிக்க மறை­மா­வட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் தெரி­வித்தார்.

jaffna-bishop

வலி.வடக்கு பிர­தே­சத்தில் இரா­ணுவ உயர்­பா­து­காப்பு வல­யத்­தி­லுள்ள வசா­விளான் புனித யாகப்பர் ஆல­யத்தின் நூற்­றாண்டு விழா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரா­ணு­வத்­தி­னரின் அனு­ம­தி­யுடன் கொண்­டா­டப்­பட்­டது. நூற்­றாண்டு விழா திருப்­ப­லியை ஒப்புக் கொடுத்து மறை­யு­ரை­யாற்­று­கை­யி­லேயே ஆயர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

உயர் பாது­காப்பு வல­யங்­க­ளுக்குள் இருக்கும் ஆல­யங்­களில் வரு­டாந்த திரு­வி­ழாக்­களைக் கொண்­டா­டு­வ­தற்கு இரா­ணு­வத்­தி­னரின் அனு­மதி கிடைக்­குமா? என்ற ஏக்­கத்­து­டனும் எதிர்­பார்ப்­பு­டனும் மக்கள் துன்­ப­மான வாழ்க்­கையை வாழ்ந்து வரு­கின்­றனர். யுத்­தத்தால் 24 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இங்கு குடி­யி­ருந்த மக்கள் இடம்­பெ­யர்ந்து நாட்டின் வெவ்­வேறு இடங்­களில் வாழ­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர். போர் கார­ண­மாக மக்­களின் வீடுகள் மட்­டு­மல்­லாது ஆல­யங்­களும் பெரும் சேதங்­க­ளுக்­குள்­ளாகி பாழ­டைந்த கட்­ட­டங்­க­ளாக உள்­ளன.

வலி. வடக்குப் பிர­தே­சத்­தி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் வெவ்­வேறு இடங்­க­ளுக்குச் சென்று அக­தி­க­ளா­கவும் அநா­தை­க­ளா­கவும் தற்­போதும் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­களில் பலர் தற்­போது உயி­ருடன் இல்லை. பலர் போரால் காய­ம­டைந்து அவ­ய­வங்­களை இழந்த நிலையில் வாழ்­கின்­றனர். இவ்­வாறு இப்­ப­குதி மக்கள் பல இடங்­களில் சித­றுண்­ட­வர்­க­ளா­கவே வாழ்ந்து வரு­கின்­றனர்.

இவர்கள் மீண்டும் தங்­க­ளு­டைய ஆல­யங்­க­ளுக்கு வரு­வ­தற்கு ஆர்­வ­மாக இருந்­தாலும் அதற்­கான அனு­மதி உடனே கிடைப்­ப­தில்லை. இதனால் மக்கள் உள ரீதி­யா­கவும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இந்த பகு­தி­யி­லுள்ள ஆல­யங்கள் இவ்­வாறு பாழ­டைந்து போவதால் 15 வரு­டத்­திற்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தேன். மீண்டும் எம் மக்கள் ஆல­யத்தை தரி­சிக்­கவும் துப்­பு­ரவு செய்து வழி­பாடு செய்­யவும் உதவி செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளேன். அவர்­களும் முயற்சி செய்­கின்றோம் என்­றார்கள். ஆனால் எல்லா இடங்­க­ளுக்கும் போக முடி­யாது என்­றனர்.

மக்கள் வருடா வருடம் தங்கள் ஆலயத் திரு­விழா வரும்­போது தாங்கள் ஆல­யத்­திற்கு போவோமோ இல்­லையோ இரா­ணு­வத்தின் அனு­மதி கிடைக்­குமோ இல்­லையோ என்ற அங்­க­லாய்ப்­புடன் காத்­தி­ருப்­பது தொடர்­கின்­றது.

வரு­டத்தில் ஒரு தடவை மாத்­தி­ரமே ஆல­யங்­களைத் தரிசிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­வதால் இங்­குள்ள ஆல­யங்கள் பாழ­டைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளே நுழைய முடியாத அளவிற்கு காணப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும் போது இறைபக்தி மிக்க மக்கள் பெரும் மனவேதனை அடைகின்றனர்.

இவ்வாறு இராணுவத்தினர் அதிகமாக வடக்கில் நிலை கொண்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இத்தகைய தடைகள் விரைவில் அகல வேண்டும் என்றார்.

Related Posts