சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை எழுதுவதற்கும், சட்டக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்குமான வயதெல்லை 30 ஆக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இப்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானம் மூலம் வயதெல்லைக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட விடயம், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலமாக அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
சட்டக்கல்விக்கான இந்த வயதெல்லை நீக்கம் மூலம் சட்டத்துறையில் கற்றுத்தேறி சட்டத்துறையில் பணியாற்ற விரும்பும் பலரும் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.