பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் குறிஞ்சி சாரல் கலை,கலாசார நாடக நிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் டி.எஸ்.சேனநாயக்கா,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர்கள் கலந்து கொண்டு குறிஞ்சி சாரல் கலை,கலாசார நாடக நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
யாழ்.மாவட்டத்தில் முதற் தடவையாக எற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இனங்களுக்கிடையில் நட்புறவையும் சமூகங்களுக்கிடையில் சமூக கட்டமைப்பையும் ஏற்படுத்தும் வகையிலாக இந்த நாடக நிகழ்வு இடம்பெற்றன.
இதில் பேராதனைப்பல்கலைகழக,மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையின் சமூகங்களில் எற்படும் மாற்றங்கள் எனும் தலைப்பிலான நாடகமும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.