Ad Widget

பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி விபத்து: குறைந்தது 13 பேர் பலி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்தக் குழந்தைகள் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். பேருந்தின் ஓட்டுனரும் இந்த விபத்தில் பலியானார்.

india_train_accident

மாநிலத் தலைநகரான ஹைதராபாதிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மேடக்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தூப்ரான் டவுனிலிருக்கும் காகதீயா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் அந்தப் பேருந்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, காலை 9.10 நிமிடங்களுக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.

13 குழந்தைகள் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகினர்.

மேடக் மாவட்டத்தின் மசைபேட் கிராமத்தில் இருந்த ஆளில்லாத ரயில்வே பாதையைக் இந்தப் பேருந்து கடக்க முயன்றபோது, மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த நான்தெத்திலிருந்து தெலுங்கானாவின் செகந்தராபாதை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பேருந்தின் மீது மோதியது.

இதில் பேருந்து பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

விபத்து நிகழந்தவுடன் உள்ளூர் மக்கள் ஓடிவந்து, வாகனத்தில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டனர்.

இது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்ட ஆளில்லாத ரயில்வே பாதைகள் இருக்கின்றன. இதில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கானர்கள் பலியாவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய ரயில்வே தினமும் 9000 பயணிகள் ரயிலை இயக்குகிறது. இந்திய ரயில்களில் தினமும் 23 மில்லியன் மக்கள் பயணம் செய்கிறார்கள். சமீபகாலாக விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில் ரயில்வே பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

Related Posts