அரச சேவையை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய இணையத்தளம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
www.complaints.gov.lk என்ற இந்த புதிய இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அரச தகவல் கேந்திர நிலையத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி குறித்த அரச நிறுவனங்களின் தேவைகளை முன்வைக்க முடியும்.
பொதுமக்களின் முன்வைக்கப்படும் தேவைகளுக்கான பதில் குறுந்தகவல் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாக சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு அறிவிக்கிறது.