யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

Jaffna-University1யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் துண்கலைக்கழகத்தின் இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டுக்கான வழிக்காட்டல் நிகழ்ச்சித்திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 23ம் திகதி நடத்தப்படுவதாக இருந்தது.

எனினும் இது, குறித்த தினத்தில் ஆரம்பிக்கப்பட மாட்டாது என்றும், அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் முன்னர் அறிவிக்கப்பட்டபடி 21ம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts