கணிதம் சித்தியெய்தாத போதும் உயர்தரத்தை பயில அமைச்சரவை அங்கீகாரம்!

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி சாதாரண தரத்தில் கணிதம் சித்தியெய்தாத மாணவர்கள் உயர்தரத்தில் கல்வியை ஆரம்பிக்க முடியும்.

எனினும் உயர்தரத்தில் பயிலும் காலத்தில் இரண்டு வருடத்துக்குள் கணிதப்பாடத்தில் சித்தியெய்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதத்துறையில் பின்னடைவான மாணவர்கள் உயர்தரத்தை பயிலாது விடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த முறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த முறை ஏற்கனவே பாடசாலை அதிபர்களின் விருப்பத்துக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts