வடமாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீடு

வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘கல்வி முறைமை மீளாய்வு’ தொடர்பான அறிக்கை, இன்று வியாழக்கிழமை (17) வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வைத்து வெளியிடப்பட்டது.மேற்படி மீளாய்வு அறிக்கையினை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியடட்டு வைக்க வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திசிறி பெற்றுக்கொண்டார்.

cv-chanthe

மேற்படி மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாவன,

  • விசேட தேவையுடையோருக்கான கல்வி முறைகளை அபிவிருத்தி செய்தல், ஆசிரியர் நியமனம்
  •   ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் தமது துறைகளில் முதுமாணிப் பட்டம் பெற மற்றும் கல்வியினை விருத்தி செய்ய உயர்கல்வியினை ஏற்பாடு செய்தல்
  •   பாடசாலை நேரத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்வதினைத் தடுத்து நிறுத்துதல்
  • கல்வி சம்பந்தமான சகல தரவுகளையும் வழங்கக்கூடிய கல்வி முறையினை கொண்டு வரும் ஸ்தாபனத்தினைத் ஸ்தாபித்தல்
  •   தமிழ் மொழி மூலமான கற்றல் நிறுவனத்தினை ஆரம்பித்தல்
  • நூல்கள், கற்பித்தல் முறைகளை வழங்கும் நிலையங்களை ஆரம்பித்தல்
  •   வலய மட்டத்தில் தற்போது இயங்குகின்ற முறைசாரக் கல்வி முறை மாற்றப்பட்டு இதற்கு மாறாக தொடர் கல்வி முறை ஏற்படுத்தப்படுதல்
  • நிதி முகாமைத்துவத்தினைச் சீராகப் பேணுதல்
  • பரீட்சை நோக்கிலான கற்பித்தல் முறையினை ஏற்படுத்தல்
  •   இணைய முறையிலான கற்பித்தல் முறை மற்றும் ஆராய்ச்சி மூலமான கற்பித்தல் முறையினை ஊக்கப்படுத்தல்
  • வடமாகாண கல்வி முறையில் புதிய நிர்வாக முறைகளைப் பிரயோகப்படுத்தல்
  • மாணவர்கள் ஆசிரியர்கள் உடல்நலங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்தல்

உள்ளிட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர, எழுத்து மூலமான விடையளிக்கும் முறைகளை மாற்றப்பட்டு செயல்முறை மூலமாக மாணவர்கள் விடையளிக்கும் திட்டத்தினைக் கொண்டு வருதல், அதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல், வலயமட்டங்களில் கல்வி சபையொன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், சபை மூலம் வலயத்திற்குத் தேவையான தீர்மானங்கள் எடுத்தல், பாடசாலை கற்கையாண்டு காலம் ஜனவரி முதல் டிசெம்பர் வரையிலும் இருக்கின்றது.

இதனை மாற்றி செப்டெம்பர் முதல் ஓகஸ்ட் வரையில் மாற்றியமைப்பது போன்றவற்றினை மத்திய அரசிற்குப் பரிந்துரை செய்வது போன்ற விடயங்களும் இந்த மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்றை இந்நிகழ்வில் ஆடிப்பிறப்புக் கூழ் காய்ச்சப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts