சிரிய அலெப்போ நகரின் மீது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் இடிந்து விழுந்த கட்டிடமொன்றின் கீழ் சிக்கியிருந்த இரு மாதக் குழந்தையொன்று 16 மணித்தியாலம் கழித்து அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த மஹ்மூத் இபில்டி என்ற மேற்படி பாலகனை மீட்டெடுத்த அலெப்போவின் அன்ஸாரி பிராந்திய சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் அந்தப் பாலகன் உயிருடன் இருப்பதைக் கண்டு உணர்வு மேலீட்டால் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.
அதேசமயம் மேற்படி இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த குழந்தையின் தாயாரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ நகர பகுதிகளில் அரசாங்கப் படையினரின் வான் தாக்குதல் காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.