பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இஸ்ரேலால் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பதில் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் தொகை 76 ஆக உயர்ந்துள்ளது.
காஸாவின் பெயிட் லஹியா நகரில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய எறிகணை தாக்குதல் ஒன்றில் 5 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.
அதே சமயம் கான்யுனிஸ் பிரதேசத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் கோப்பி நிலையமொன்றில் ஆர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்துக்கிடையிலான உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளை தொலைக்காட்சியில் கண்டு களித்துக்கொண்டிருக்கையில் 8பேர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இஸ்ரேலிய போர்விமானங்கள் இரு வீடுகள் மீது நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதனுடன் பிறிதொரு தாக்குதலில் 19 வயது இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான்.
அதேசமயம் மேற்கு காஸாவில் காரொன்றின் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.