உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாதோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்

EXAMஇம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

இதன்படி 01122784208/ 2784537 மற்றும் 2784422 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கு அழைத்து இந்த விடயம் தொடர்பில் அறிவிக்க முடியும் என புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

சகல பரீட்சாத்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை கடந்த வாரம் தபாலிடப்பட்டுள்ளதாகவும் தற்போது அவை கிடைக்கப்பெற்றிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெற்றிருக்கும் எனவும் அவற்றை விரைவில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் புஸ்பகுமார கூறினார்.

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்கான நேர அட்டவயை இன்று வெளியடப்பட்டுள்ளது. அதனை http://www.doenets.lk/exam/docs/al2014/time-table-al-2014.pdf என்ற முகவரியூடாகப் பார்வையிடமுடியும்.

Related Posts