யாழ் இந்துக் கல்லூரியில் நேற்றய தினம் (07.07.2014) ”மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான” அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவானது எமது கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக கௌரவ அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜீ.எ.சந்திரசிறீ அவர்களும் கலந்து கொண்டனர். இதனை விட யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாகாண கல்விப்பணிப்பாளர், யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர், மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள் என பலரும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.
நேற்றய தினம் நடைபெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின் விருந்தினர்கள் அனைவரும் பான்ட் வாத்தியத்துடன் அடிக்கல் நாட்டும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் பிரதம வருந்தினர், சிறப்பு விருந்தினர் உட்பட அனைவரும் கட்டடத்துக்கான அத்திபாரக்கற்களை நட்டு வைத்தனர். அதன் பின் குமாரசுவாமி மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதில் அதிபர் உட்பட அமைச்சர், ஆளுநர் அனைவரும் இவ் தொழினுட்ப பாடம் தொடர்பான விளக்கத்தினை மாணவர்களுக்கும் அங்கு வருகை தந்திருந்த பெற்றோர்களுக்கும் அளித்தனர்.
இக்கட்டட தொகுதிக்கு 6 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டடத்திற்கு 3 கோடி ரூபாவும் இக்கட்டடத்தில் அமையவிருக்கின்ற இயந்திரத் தொகுதிகளுக்கு 3 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு முதலமைச்சருக்கும் கல்வியமைச்சரும் அழைக்கப்பட்டிருந்தபோதும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதான அரசின் கொள்கைத் திட்டம்: டக்ளஸ்