சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தினால் அமரர் புஸ்பராஜன் வாமதேவன் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை மத்தி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சுன்னாகம் ஐயனார் ஆலய வீதியில் அமைந்துள்ள மைதானத்தில் சனிக்கிழமை (05) இரவு மின்னொளியில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து இளவாலை மத்தி விளையாட்டுக் கழகம் மோதியது.
ஜந்து சுற்றுக்களாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், முதல் மூன்று சுற்றுக்களையும் இளவாலை மத்தி விளையாட்டுக்கழகம் 25:13, 25:20, 25:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிச் சம்பியனாகியது.