அவுஸ்திரேலியாவினால் 41 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.பொருளாதார அகதிகள் என அடையாளம் காணபட்டவர்களே இவ்வாறு கையளிக்கப்பட்டதாக குடிவரவுத் துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிப்படைத்தன்மையுடன் 37 சிங்க பிரஜைகளும், 4 தமிழர்களும் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிரகத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், 41 அகதிகளையும் கையேற்றமை தொடர்பாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வில்லை என்றும் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்தவாரம் அவுஸ்திரேலியாவில் இடைமறிக்கப்பட்ட ஏனைய அகதிகள் தொடர்பாக எந்தவிதமான தகவலையும் அவர் வெளியிடவில்லை.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பின்னர் ஏனைய தகவல்களை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.