யாழ். மாநகர எல்லைக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுபவர்களுக்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் மாநகர சபையினால் இலவசமாகச் செய்து கொடுக்கப்படுமென யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள இந்திய வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கிடையிலான சந்திப்பொன்று யாழ்.மாநகர சபையில் மாநரக முதல்வர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு வீட்டினை அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் பெறுவதற்கு 3000 ரூபா வரை செலவு செய்யப்பட்டவேண்டியிருந்தது.
ஆனால், இந்திய வீட்டுத்திட்டத்தினைப் பெறுவர்கள் ஏழை மக்கள் என்றபடியால் அவர்களின் நலன்கருதி குறித்த ஆவணங்களுக்கான தொகை அறவிடப்படுவதில்லையென இலவசமாக குறித்த ஆவணங்கள் வழங்கப்படும் எனவும் மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இது இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகள் அமைப்பவர்களுக்கு மட்டுமே என்று அவர் மேலும் தெரிவித்தார்.