தாயொருவர் ஒரு சூலில் 5 குழந்தைகளை பிரசவித்துள்ள சம்பவமொன்று இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்பெற்றுள்ளது.
கண்டி வெரலகம பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான தாயொருவரே இவ்வாறு 5 குழந்தைகளை பிரசவித்தவராவார்.
இதில் ஒரு பெண்குழந்தையையும் 4 ஆண் குழந்தைகளையுமே பிரசவித்துள்ளார். தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.