IT Master Mind quiz competition -2014 : யாழ்.இந்து மாணவன் வெற்றி!

IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

jaffna-hindu-gnanakeethan

நாடளாவிய ரீதியில் 1,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று ஜுன் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இறுதிச்சுற்றில் பங்கேற்ற 6 மாணவர்களில் மிகவும் திறமையாகச் செயற்பட்ட ஞானகீதன் இறுதிச்சுற்றில் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டார்.

இவருக்கு esoft metro campus நிறுவனத்தினால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ரூபா 100,000 பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

IT Master Mind quiz competition போட்டி ITN தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts