காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது.
வாழைக்குலை பூமியை நோக்கியே இருப்பது வழமை. ஆனால் மேற்படி வாழைக்குலை வானத்தை நோக்கியவாறே காணப்படுகின்றமை அதிசயமானதாகும்.
இதற்கு முன்பதாக இவ்வாறு காய்த்ததில்லையெனவும் இதுவே முதல் தடவை என தோட்டத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த வாழைக்குலையை இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.