இலங்கையில் அங்கீகாரம் பெற்ற 23 ஆவது வணிக வங்கியான கார்கில்ஸ் வங்கி தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை நேற்று முன்தினம் ஆரம்பித்தது.
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் திறந்துவைத்தனர்.
5 பில்லியன் ரூபா முதலீட்டில் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வங்கியானது கார்கில்ஸ் பி.எல்.சி. மற்றும் சிடி ஹொல்டிங்ஸ் பி.எல்சி. ஆகியவற்றின் இணை அங்கத்துவ நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் இல. 696, காலி வீதி, கொழும்பு – 3 எனும் முகவரியில் அமைந்துள் ளது. அத்துடன் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹரிஸ் பிரேமரட்ன, பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் தேவா ரொட்ரிகோ, கார்கில்ஸ் பி.எல்.சி.யின் தலைவர் லூவிஸ் பேஜ், பதில் தலைவர் ரஞ்சித் பேஜ், மற்றும் பல அதிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்