போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று (செவ்வாய்க்கிழமை) 4–வது நாளாக தொடர்ந்தது.
கட்டிடம் இடிந்த போது, அங்கு 72 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
துணை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கமாண்டோ படை வீரர்கள், சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு படையினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2200 பேர் 11 மாடி கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு–பகலாக இந்த பணி நடந்து வருகிறது.
கான்கிரீட் தளங்களை துளையிட்டு உடைத்து அகற்றி உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை வரை இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. நேற்றிரவு முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை மேலும் 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
இதேபோல் நேற்று மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.