கல்விக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்காத இலங்கை அரசு! உலக வங்கி குற்றஞ்சாட்டு

இலங்கை அரசாங்கம் கல்வித் துறைக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

Deolalikar

பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கை அரசாங்கம் மொத்த தேசிய உற்பத்தியில் மிகவும் சொற்பளவிலான தொகையையே கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

நடுத்தர வருமானத்தை ஈட்டும் நாடுகளில் இலங்கை மிகவும் குறைந்தளவில் கல்விக்காக செலவிடுவதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய வலய கல்வித்துறை ஆலோசகர் அனில் தியோலிகார் (Anil Deolalikar) தெரிவித்துள்ளார்.

ஆரம்ப நிலைக் கல்வியின் போட்டித் தன்மை மற்றும் தரம் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இரண்டாம் நிலைக் கல்வியின் தரம் கடந்த இரண்டு தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்து செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்

Related Posts