சாவகச்சேரியில் இன்று திங்கட்கிழமை குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரெனக் கலைந்தது. இந்த நிலையில் வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்வையிட வந்தவர்கள் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்களும் சிறுவர்களும் அடங்குவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.