முஸ்லிம் மீதான தாக்குதலுக்கு யாழ். மாநகர சபை கண்டனம்

அளுத்தகமவில் இடம்பெற்ற முல்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்ககப்பட வேண்டுமெனக் கோரி யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

yokeswarey

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நேற்று காலை நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தமிழ்க் கட்சியினர் தற்போது முதலைக் கண்ணீர் வடிகின்றனர் எனவும் அதன் வெளிப்பாடாகவே யாழில் போராட்டம் செய்ததாகவும் எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றே இவர்களின் செயற்பாடு அமைந்திருப்பதாகவும் முஸ்லிம் உறுப்பினரான சரபுல் அனாம் மாநகர சபையில் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாநகர முதல்வர் அளுத்கம தாக்குதல் சம்பவத்தை கண்டிப்பதுடன் இத் தாக்குதலுடன் தொடர்புடைய தரப்பினர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இச் சம்பவத்தின் போது அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வெண்டுமென்றும் குறிப்பிட்டார். இதனை சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

Related Posts