இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமஸ் லிட்செருடனான குழுவினர் இன்று யாழ்.வருகை தந்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநரை அவரது அலுவலகத்திலே சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கில் ஏற்பட்ட அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பிலும் வடக்கில் தேவைப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பியதுடன் இதுவரை காலமும் வடக்கில் பாரிய அபிவிருத்திமுன்னேற்றங்கள் பாராட்டத்தக்க விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கு ஆளுநர் தற்போது வடக்கில் பாரிய அபிவிருத்திகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதுடன் இன்னமும் வடக்கில்
அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.