வலிகாம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.கல்லுண்டாய் வீதி காக்கைதீவிலுள்ள காணியில் மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினால் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சண்முகம் சிவகுமாரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கொல்களமாக இருந்த குறித்த காணியானது பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் குறித்த காணியினை தங்களுக்குத் தரும்படி மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கம், எமது (வலி.தென்மேற்கு) பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்திருந்தது.
அந்தக் கோரிக்கையினைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரதேச சபை, உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் அனுமதியுடன் குறித்த காணியினை மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்திற்கு கொடுப்பதற்கு முன்வந்துள்ளோம். இதற்கமைய அந்தக் காணியில் சங்கத்தின் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.