வெள்ளவத்தை, தெஹிவளை நோலிமிட்டுக்கும் அச்சுறுத்தல்!

வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

NOLIMIT

இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடிவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கைதுசெய்யபட்டுள்ளனர்.

மேலும் இரண்டு பேர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாணந்துறையில் நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரையான போது அங்கு பொருத்தப்பட்டிருந்த 24 கண்காணிப்பு கமராக்களும் முற்றாக எரிந்துள்ளன.

எனவே அதன் தரவுகளை மீளப்பெற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts