பாணந்துறையில் நோ லிமிற் காட்சிக் கூடம் தீக்கிரை!

நாட்டின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான நோ லிமிற் நிறுவனத்தின் பாணந்துறை காட்சிக் கூடம் இன்று அதிகாலை பாரிய தீயில் அழிந்து போனது.

nolimit-1

nolimit-2

அதிகாலை 3.00 மணி அளவில் பெற்றோல் குண்டு வீச்சு மூலம் தீ வைக்கப்பட்டு இருக்கின்றது என்று இப்பிரதேசத்தில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன.

தீயணைப்புப் படையினருக்கு தீயை அணைக்க பல மணி நேரம் எடுத்தது. ஏனென்றால் தீ கட்டிடத்தின் உட்பகுதிகளையும் ஊடறுத்து இருந்தது.

இதே நேரம் வன்முறைகளையும், பதற்றத்தையும் தவிர்க்க விசேட அதிரடிப் படையினர் பிரதேசத்தில் குவிக்கப்பட்டனர்.

குண்டு வெடிப்பு சத்தங்கள் பல முன்னதாக கேட்டமை பெற்றோல் குண்டு வீசப்பட்டு இருக்கின்றது என்பதை காட்டுவதாக சமூக இணைப்புத் தளங்களில் பதிவுகள் ஏற்றப்பட்டு உள்ளன.

சம்பவம் இடம்பெற்றபோது ஊழியர்கள் நால்வர் காட்சிக் கூடத்தில் இருந்து உள்ளனர். ஆனால் இவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை

Related Posts