நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்றிரவு OP Sri Lanka என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட ட்வீட் ஒன்றில் “Extremist ‘Bodu Bala Sena’ bodubalasena.org has been TangoDown #OpSriLanka #BBS @HackerBrigade #CrimesAgainstHumanity” இனத்துவேஷமான பொது பலசேனவின் இணையத்தளம் வீழ்த்தப்பட்டது) என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல இப்போது வரை பொது பலசேனவின் இணையத்தளம் இயங்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல அரச இணையத்தளங்களும் முடங்கியே இருக்கின்றன.
நாட்டு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரதிபலிப்பாக வெளிநாடுகளில் இயங்கும் hackers கூட்டமைப்பின் எதிர்ப்பு வெளிப்பாடே இது என்று ட்வீட்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் அலுவலகம் Primeminister.gov.lk, வெளிநாடுகள் பலவற்றுக்கான தூதரகங்கள், Sri Lanka Transport Authority, Ceylon Petroleum, the Employee’s Trust Fund website, Ports Authority, National Institute of Health, Department of Lotteries என்று பல முக்கிய தளங்கள் ஹக் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் இதே போல இலங்கையின் அரச இணையத்தளங்கள் மீது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் இன்னும் சில மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் hackers குழுமங்கள் OP Sri Lanka – Operation Sri Lanka என்னும் பெயருடன் இணையவெளிப் போரைப் பிரகடனப்படுத்தி நூற்றுக்கணக்கான இணையத் தளங்களை முடக்கியதோடு, அந்த இணையத்தளங்களின் சகல விபரங்களையும் (login details) வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்ப்புக்குரல் என்று ‘கறுப்பு மே’ மாதத்தை நினைவு கூர்ந்ததாக அந்த OP Sri lanka குழுமம் தெரிவித்திருந்தது.
எனினும் சில மணி நேரங்களின் பின்னர் அனேக தளங்கள் மீண்டும் மீட்கப்பட்டு செயற்பட வைக்கப்பட்டன.
எனினும் இப்போதைய தாக்குதல் கடந்த ஞாயிறு பொது பலசேன முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்த சம்பவங்களின் எதிரொலி என்று கருதப்படுகிறது.
அதிலும் முதல் குறியாக பொது பலசேனவின் தளம் முடக்கப்பட்டதும் அதையே காட்டியிருக்கிறது.
அண்மையில் வடமாகாணசபையின் இணையத்தளமும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது