Ad Widget

வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் முயற்சியில் இன்டெல்!

உலகின் முன்னணி கணிப்பொறி சிப்கள் தயாரிக்கும் நிறுவனமான ‘இன்டெல்’ (Intel), வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் நோக்கத்துடன் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

intel-hq1

இன்டெல் நிறுவனம் கடந்த புதன் கிழமை தைவானில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சி ஒன்றில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக தொழில்நுட்ப சந்தையில் டேப்லேட்கள் மற்றும் மடிக்கணினிகள் ஏற்படுத்திய புரட்சி காரணமாக, மேசைக் கணினிகள் விற்பனையில் தொய்வை சந்தித்து வருகின்றன. இதனை சரி செய்யவே, இன்டெல் இந்த புதிய திட்டதை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த வயர்லெஸ் கணினிகளில், கணிப்பொறி பாகங்களுக்கான மின்சாரப் பகிர்வு மின்காந்த தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தவும், தரவு பரிமாற்றம் ‘வைஜிஜ்’ (WiGig) எனும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தவும் இன்டெல் முடிவு செய்துள்ளது.

இன்டெல் நிறுவனம் சமீபத்தில் skylake எனும் புதிய 14nm செயலியினை அறிமுகப்படுத்தியது. இதனை அடிப்படையாகக் கொண்டு வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்க இருப்பதாக இன்டெல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் க்ரிக் ஸ்கௌகென் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய தொழில்நுட்பம், வரும் 2016-ம் ஆண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது கணினிகள் வர்த்தகத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Posts