அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
சட்ட ஒழுங்கை பேணி பொதுமக்களின் உயிர்களையும், வழிபாட்டு ஸ்தலங்களையும், செத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், வன்முறைகளை தவிர்த்து, பொறுமை காத்து, சட்ட ஆட்சியை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.