Ad Widget

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு

காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஆரம்ப நஷ்ட ஈடாக 50000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வழங்கும் செயற்கிரமம் ஆரம்பமாகியுள்ளது.

malaysia-airlines-missing-mhm-370

இதுவரை 6 மலேசிய குடும்பங்களுக்கும் ஒரு சீன குடும்பத்துக்கும் நஷ்ட ஈட்டுப்பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 40 சீன குடும்பங்களது நஷ்ட ஈட்டுக் கோரிக்கையை காப்புறுதியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

மேற்படி விமானத்தில் பயணித்து காணாமல் போன 239 பயணிகளினதும் உறவினர்கள் தலா 175000 அமெரிக்க டொலருக்கு அதிகமான பணத்தை கோர முடியும்.

எம். எச். 370 விமானம் கடந்த மார்ச் 8ஆம் திகதி கோலாலம்பூர் நகரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமல் போனது.

அந்த விமானம் இழக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் இன்னமும் பிரகடனப்படுத்தவில்லை என மலேசிய பிரதி வெளிநாட்டு அமைச்சர் ஹம்ஸாஹ் ஸெயினுதீன் கூறினார்.

மேற்படி விமானத்தில் பயணித்த பயணிகளது முழுமையான நஷ்ட ஈட்டுத்தொகை தொடர்பில் கூறுகையில் அந்த விமானத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிவிக்க காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts