ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழு 77 (ஜி 77) சுவர்ண ஜயந்தி ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (13) பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரை சென்றடைந்தார்.
தலைவர்களின் மாநாடு ஜூன ; 14,15 ஆகிய இரு தினங்களில் பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரத்தில் நடைபெறும். இது நல்வாழ்க்கைக்கான புதிய உலக முறை என்ற தொனிப்பொருளில் நடைபெறும்.
ஜனாதிபதி அவர்களுக்கு சாந்தா குருஸ் விரு விரு (Viru Viru) சர்வதேச விமான
நிலையத்தில் இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பொலிவிய செனெட் சபைத் தலைவர் திரு. யுஜினியோ ரொஹாஸ் அபாஸா (Eugenio Rojas Apaza), கியுபாவின் இலங்கைத் தூதுவர் சரத் திசாநாயக்க ஆகியோர் சனாதிபதி அவர்களை வரவேற்றனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பொலிவியாவிற்கு விஜயம் செய்கின்ற முதலாவது இலங்கை அரச தலைவராவார்.
ஜி 77 என்ற பெயரில் பிரபல்யம் அடைந்த 77 குழுவும் சினாவும் என்ற உத்தியோகபூர்வ பெயரில் குறிப்பிடப்படுகின்ற அமைப்பு ஐக்கிய நாடுகளின் அங்கத்துவம் வகிக்கின்ற அபிவிருத்தி அடையும் நாடுகளின் கூட்டமைப்பாகும். அது அங்கத்துவ நாடுகளின்கூட்டு பொருளாதார அபிலாஷைகளை மேம்படுத்துதல், ஐக்கிய நாடுகளின் முறைக்குள் அனைத்து பிரதான சர்வதேச பொருளாதார விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது ஒருங்கிணைந்த நிலைப்பாட்டில் இருந்து செயலாற்றுதல் மற்றும் அபிவிருத்தியின் பொருட்டு
தெற்கு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் 15ஆம் திகதி தலைவர்கள் மகாநாட்டில் உரை நிகழ்த்துவார்.
அவர் மாநாட்டில் கலந்துகொள்கின்ற ஏனைய அரச தலைவர்கள் பலருடன் இருதரப்பு
பேச் சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்ன ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துள்ளனர்.