செவிப்புலனற்றோருக்கான இலவச சிகிச்சை முகாம்

பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்தார்.

ear-check-up-camp

இந்த மருத்துவ முகாமில், பலாலி இராணுவ வைத்தியர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர்களும் இணைந்து சிகிச்சையளிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரையில் இடம்பெறவுள்ள மருத்துவ முகாமில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செவிப்புலன் பாதிக்கப்பட்டோர் கலந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை (09) இடம் பெறும் முதற்கட்ட சிகிச்சை முகாமில் உபகரணங்கள் தேவைப்படுவோரில், முதற்கட்டமாக 1000 பேருக்கு செவிப்புலன் உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts