நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் உள்ள கோஷே, அட்டகரா, அகபல்வா மற்றும் அகஞ்சாரா ஆகிய மூன்று கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அப்பகுதி முழுவதும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் பியே தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வடகிழக்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இங்கு தீவிரவாதிகளின் தாக்குதலில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போகோ ஹாரம் தீவிரவாதிகளை ஒழிக்க நைஜீரிய ராணுவத்துடன் அமெரிக்க ராணுவமும் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.