நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வாரம் இருமுறை வெளியாகும் நக்கீரன் பத்திரிகையில், கடந்த மே 24 ஆம் தேதி இதழில், ‘அமைச்சர் முனுசாமி நீக்கம்– மீண்டும் சசிகலா ஆதிக்கம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தியில், சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும் குந்தகம் ஏற்படும் விதமாக பல ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
எனவே என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், தலைமை நிருபர் இளையசெல்வன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.