இராணுவத்தினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம் – சிறீதரன்

யாழ். மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணி உரிமையாளர்கள் காணி சுவீகரிப்பு தொடர்பாக உடனடியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

nunaavil

சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இராணுவத்தின் தேவைகளுக்கு நிரந்தரமாக மக்கள் காணிகளை கையகப்படுத்துவதற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

இராணுவத்தினர் வழங்கும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் உடனடியாக உங்கள் காணிகள் தொடர்பில் உடனடியாக நீதிமன்றங்களையோ,மனித உரிமை அணைக்குழுவையோ நாடி வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதும் நீதியை பெற்றுதருவதுமான ஒரே ஒரு இடமாக நீதிமன்றம் உள்ளதால் உடனடியாக உங்கள் காணிகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செயுங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் ஆலோசனைகள் தேவைப்படின் தமிழ் தேசிய கூடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

சாவகச்சேரியிலும் மக்கள் போராட்டம்!

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலியில் போராட்டம்!

Related Posts