வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று திங்கட்கிழமை(26) முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்தனர்.
நேற்றுக் காலை தொண்டைமானாறு காட்டுப்புலம் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்த பாடசாலைக்குச் சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையென சகோதரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.