காரைநகரில் வயிற்றோட்டம் காரணமாக 60 பேர் பாதிப்பு

water1காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பரவிவரும் வயிற்றோட்டம் காரணமாக இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட குடிநீரே காரணம் என்றும் காரைநகர் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் எஸ்.கண்ணன் திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்டச் செயலகத்தின் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச சபையினால் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர் பாவனைக்கு உகந்ததல்ல. இதனால் பொதுமக்கள் பலர் வயிற்றோட்ட போன்ற பல்வேறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளாகியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதிக்கு குடிநீர் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காரைநகர் பிரதேச சபைத் தலைவர் ஆ.ஆனைமுகன் உறுதியளித்திருந்த போதும், பின்னர் அது கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts