கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் விபத்தில் படுகாயம்

accidentஉடுவில் பகுதியில், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த வான் மோதியதில் பிரதேச சபை உறுப்பினர் படுகாயமடைந்துள்ளார்.

ஏழாலை மேற்கைச் சேர்ந்த எஸ்.செல்வராசா (68) எனும் குறித்த பிரதேச சபை உறுப்பினர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட பிரதேச சபைகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (25) வலி. தெற்கில் (உடுவில்) இடம்பெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி உறுப்பினர் பிரதேச சபைக்கு முன்னால் தனது மோட்டார் சைக்கிளினைத் திருப்ப முற்பட்ட போது, பின்னால் வந்த வான் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Posts